IDC அறிமுகம்
இஸ்லாமிய நூலகம்
| இஸ்லாமிய நூலகம் | ![]() | ![]() |
நமது மர்கசின் பிரதானமான பணி இஸ்லாமிய நூலகத்தை நடத்தி வருவதாகும். குவைத்தில் வசிக்கும் நம் தமிழ் மக்கள் மார்க்கத்தை முறைப்படி விளங்குவதற்கு ஏற்ற இடமாக நமது நூலகம் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் குர்ஆன்சுன்னா அடிப்படையில் பிரச்சாரம் செய்யும் இந்திய இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளின் தமிழ் இஸ்லாமிய அனைத்து மார்க்க அறிஞர்களின் உரைகள் அடங்கிய ஆடியோ வீடியோ டீவீடிகள் ஏறக்குறைய 800 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ளன. (தலைப்புகளை காண லிங்கை க்ளிக் செய்யவும்) மேலும் ஒவ்வொரு வாரமும் நமது மர்கசின் தாயி (அழைப்பாளர்கள்) கள் உரை நிகழ்த்திய ஜும்மா தலைப்புகளும், மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளின் தலைப்புகளும் இடம்பெறும். ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் நமது நூலகத்திற்கு குவைத் நகரின் பல பாகத்திலிருந்தும் மக்கள் திரளாக வந்து பயன்பெறுவர். நமது நூலகத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் டெபாசிட் முறையில் முன்பணம் செலுத்தி நூலக உறுப்பினராக இணைந்து விட்டால் இலவசமாக சீடிகளை இரவல் எடுத்து சென்று பார்த்து விட்டு திரும்ப தரலாம். புதியதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு இலவசமாகவே சீடிகள் வழங்கப்பட்டு வருகிறது. சீடிக்களுடன் இஸ்லாமிய புத்தகங்களும் குர்ஆன்மொழிபெயர்ப்புகளும் விற்பனைக்கு உள்ளன. |