ஐயமும் தெளிவும்
மாதாந்திர அறிவு போட்டி
திருக்குர்ஆன் திறனாய்வுப் போட்டி- 2012
| திருக்குர்ஆன் திறனாய்வுப் போட்டி- 2012 | ![]() | ![]() |
بسم الله الرحمن الرحيم திருக்குர்ஆன் திறனாய்வு சிறப்புப் போட்டி - 2012 நிச்சயமாக இக் குர்ஆனை சிந்திப்பதற்காக எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? அல்குர்ஆன் 54:40 மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? அல்குர்ஆன் 47:24 அல்லாஹ்வால் கேட்கப்படும் இந்த வசனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒவ்வொருவரும் குர்ஆனை சிந்தித்து நல்லணர்வு பெறவேண்டும் என்ற அடிப்படையில் வருடந்தோறும் பிப்ரவரி25 அன்று குவைத் அரசு விடுமுறையை முன்னிட்டு நடைபெறும் ஒரு நாள் நிகழ்ச்சியை மையமாக வைத்து திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ். அந்த அடிப்படையில் இவ்வருடம் 2012க்கான போட்டியை அறிமுகப்படுத்திகிறோம். எனவே இப்போட்டியில் கலந்து உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆனை விளங்கி அல்லாஹ்வால் தரப்படும் அருள் வளங்களை பெறுவோம். |